அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா - ரசிகர்கள் அதிர்ச்சி

 
sania

இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டியுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டைய பட்டங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக புகழப்படுகிறார். அவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார். சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்-கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார். சோயிப் மாலிக்-கும் சானியா மிர்சாவும் பிரியப் போகிறார்கள் என கடந்த  சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார். 

வருகிற பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு அவர் விடைபெறுவார் என கூறப்படுகிறது. உடல்நல காரணங்களை மேற்கோள் காட்டி அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டு உள்ளார்.  இந்த அறிவிப்பு சானியா மிர்சாவின் ரசிகர்கள் மட்டுமின்றி டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.