திடீரென டி20 தொடரில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன் - காரணம் இதுதான்!

 
sanju samson

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலையுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.  

Jithesh Sharma

இந்நிலையில், இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டியில் இலங்கை வீரர் பதும் நிஷங்கா அடித்த பந்தை சஞ்சு சாம்சன் டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் போது கீழே விழுந்தார். அப்போது அவரது முலங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.