தோனி மட்டுமே ஆதரவாக இருந்தார் - விராட் கோலி நெகிழ்ச்சி

 
dhoni- kholi

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

ஆசியக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 பிரிவு ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் என்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 சேர்த்தது.. சிறப்பாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா  16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5வது பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

Dhoni- kholi

இந்நிலையில், போட்டிக்கு பின் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விராட் கோலி, நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை என கூறினார்.