முகமது ஷமிக்கு கொரோனா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகல்

 
Mohammed shami

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி் செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். 

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது வருகிற 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20-ம் தேதி மொஹாலியில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.