கனவு நனவாகியுள்ளது - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

 
dinesh karthik

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கனவு நனவாகி இருப்பதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதனிடையே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோல் அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ind squad

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், சஹால், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில், தீபக் சஹார், முகமது ஷமி, ஸ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பைக்கு தேர்வானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கனவு நனவாகி இருப்பதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.