டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா - பிளேயிங் லெவன் இதுதான்

 
toss

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 


இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்க் செய்து விளையாடவுள்ளது. 

team india

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், விராட் கோலி,  சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, சஹால், பும்ரா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், லியம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர்(கேப்டன்), மொயின் அலி, கிரைய்க் ஒவர்டான், டேவிட் வில்லே, ப்ரைடான் கார்ஸ், ரீஸ் டாப்லே உள்ளிட்டோர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.