விராட் கோலியின் மோசமான ஃபார்ம் - ரோகித் சர்மா கூறியது என்ன ?

 
rohit

மோசமான ஃபார்மால் பேட்டிங்கில் திணறி வரும் விராட் கோலிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். 

ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி அன்மை காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விராட் கோலியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக விராட் கோலி ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இதேபோல் நடந்து முடிந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலுமே விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டி20 போட்டியில் 1 ரன்னும், நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் 11 ரன்களும் மட்டுமே எடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய கபில் தேவ் விராட் கோலியை டி20 அணியில் இருந்து நீக்கலாம் என கூறினார். 

virat

இந்நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டி முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா கூறியதாவதுள்: ஃபார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது. ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்றிரண்டு தொடர்கள் மோசமாக அமையக்கூடும். கிரிக்கெட்டில் இது இயல்பானது. இதன்மூலம் அவரை மோசமான வீரராக கருதிவிட முடியாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல. இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.