பாகிஸ்தான் எங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தந்தது - ரோகித் சர்மா

 
rohit

நேற்றைய போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 பிரிவு ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் என்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 சேர்த்தது.. சிறப்பாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா  16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5வது பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது. 

indvspak

போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும். இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வருவோம். இவ்வாறு கூறினார்.