அனைத்து வீரர்களிடமும் நான் எதிர்ப்பார்ப்பது இதுதான் - கேப்டன் ஹர்திக் பாண்டியா

 
Hardick

இன்றைய போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும், சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சிறப்பான ஆட்டடத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 

suryakumar

இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லிம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றிக்குக்கு பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: மிகவும் சிறப்பாக விளையாடினோம். குறிப்பாக சூர்யகுமார் யாதக்கு இது சிறப்பான இன்னிங்ஸ். ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடும் நிலை எல்லா நேரத்திலும் சரியாக அமைந்துவிடாது. இன்னும் சில பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்கள் சேர்க்க வேண்டும். வீரர்கள் புரபஷனலாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. மகிழ்ச்சியுடன் விளையாட சொன்னேன். எல்லா வீரர்களும் இந்த அணியில் எனக்கு ஏற்கனவே பரிட்சையமானவர்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களின் அபார ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அடுத்தப் போட்டியில் எவ்வித மாற்றம் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.