காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டி

 
INDW

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நேற்றிரவு தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யாஷிகா பாட்டியா, ஜெமிமா, ஹர்மன்பிரீத் கவூர், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், மேக்னா சிங், ரேனுகா சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.