காமன்வெல்த் போட்டிகள் - 18 பதக்கங்களை குவித்துள்ள இந்தியா

 
medal

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 18 பதக்கங்களை வென்றுள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் 18 பதங்கங்களை வென்றுள்ளது. 5வது நாள் முடிவில் இந்திய வீரர்கள் 13 பதங்கங்களை வென்றிருந்தனர். 

இந்நிலையில், 6வது நாள் போட்டிகள் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் இந்திய வீரர்கள் மேலும் 5 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்றிய போட்டியில், 
பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கல பதக்கம் வென்றார்.  தேஜஸ்வின் சங்கர் உயர தாண்டுதலில் வெண்கல பதக்கத்தை வென்றார். பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் குர்தீப் சிங் மற்றும் லவ்பிரீத் சிங் இருவரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.