ஆசியக் கோப்பை கிரிக்கெட்: கோலி,சூர்யாகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி 192 ரன்கள் குவிப்பு

 
india match

ஆசியக் கோப்பை தொடரின் 4வது லீக் இந்தியா மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.

india match

டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆட முயன்ற ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த ஆட்டமிழந்தார். மறுபுறம் தடுமாற்றத்துடன் ஆடி வந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். மறுபுறம் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் சூறாவளி போல ஆடி 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68 ரன்கள் குறித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுபுறம் விராட் கோலி 59 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.கலக்கலாக ஆடிய இந்த ஜோடி 42 பந்துகளில் 98 ரன்களை குவித்தது.20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது.