வெற்றியை தொடருமா இந்தியா? - இன்று 2வது டி20 போட்டி

 
ind vs eng

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி கடந்த 29ம் தேதி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு அங்குள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இதேபோல் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.