தொடரை கைப்பற்றப்போவது யார்? - இன்று 3வது டி20 போட்டி

 
IND

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடிய போதும் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.   

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு நடைபெறவுள்ளது.  இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு ஒருங்கிணைந்து விளையாடினால் இன்றை போட்டியில் வெற்றி பெறலாம். மேலும் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.