இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா? - இன்று 3வது ஒருநாள் போட்டி

 
IND

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவதாக விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் இன்று சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷானுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்று பெற்று ஆறுதலை தேடிக்கொள்ள முயற்சி செய்யும்.