இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி - இன்றிரவு மும்பையில் நடக்கிறது

 
ind vs sri

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகிற 03, 05, 07 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. ஆகையால் இந்த தொடரில் இந்திய அணி இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ind

இந்திய அணி : இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இன்றைய இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இலங்கை அணி : பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா உள்ளிட்டோர் இன்றைய இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.