டி20 உலக கோப்பை - இந்தியா-தென் ஆப்ரிக்கா இன்று மோதல்

 
ind vs Rsa

டி20 உலக கோப்பை தொடரில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

IND

சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை  வீழ்த்தி நான்கு புள்ளிகளுடன் குரூப்2 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் இன்று பெர்த்தில் நடைபெறவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் தென் ஆப்ரிக்க அணியும் இன்றைய போட்டியில் வெற்ற பெற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.