நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி

 
ind vs nz

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. 
  
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும், சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சிறப்பான ஆட்டடத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லிம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.   

ind

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் அந்த போட்டி கணக்கில் வராது. ஆகையால் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இதேபோல் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடர் சமினில் முடியும். இதேபோல் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் இந்தியா தொடரை கைப்பற்றும். இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.