இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடக்கம்

 
INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நிறைவடைந்தது. அதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியுடன் தோல்வி அடைந்து இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இதனையடுத்து  நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது.  

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.