இந்தியாவிற்கு கைக்கொடுத்த மழை....டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

 
ind

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி டிரா ஆனது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நேபியரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டிம் சவுதி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் தடுமாறியது. அந்த அணியின் ஸ்கோர் 180ஐ தொடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டெவான் கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தனர். 

ground rain

இதனையடுத்து 161 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷான் 10 ரன்களிலும், ரிஷப் பந்த் 11 ரன்களிலும் வெளியேறினர். அடுத்த இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆன நிலையில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் வெளியேறினார். 9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி டிரா செய்யப்பட்டது. டி.எல்.எஸ் முறைப்படி இரு அணிகளும் சம ரன்ரேட்டில் இருந்ததால் போட்டி டை செய்யப்பட்டது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.