நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? - இன்று 3வது ஒருநாள் போட்டி

 
ind vs nz

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் இந்தூரில் நடைபெறுகிறது. 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலை தேடிக் கொள்ள முயற்சி செய்யும். ஆகையால் இன்றைய போட்டி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.