தொடரை கைப்பற்றுமா இந்தியா? - நாளை 2வது ஒருநாள் போட்டி

 
INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அற்புதமாக ஆடிய சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியதோடு, 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். .இதனையடுத்து 350 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நியூஸிலாந்து பேட்ஸ்மனான பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. 

IND

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வளைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நியூசிலாந்து அணி ஆயத்தமாகி வருகிறது. இதனால் நாளைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.