இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து

 
ground rain

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 
 
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

IND

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று, இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற இருந்தது. இந்நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மழை விடாமல் தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது.