வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா? - இன்று நெதர்லாந்துடன் மோதல்

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் இன்று மதியம் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

இந்நிலையில், இன்று மதியம் நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது.