ஒருநாள் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா ?

 
team india

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கடந்தாண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், டெஸ்ட் தொடர் 2க்கு 2 (ஒரு போட்டி டிரா) என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனை தொடர்ந்து டி20 தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து ஒரு போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

india

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரில் வென்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும். இதேபோல் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற தீவிரம் காட்டும். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், விராட் கோலி,  சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சர்தூல் தாகூர், முகமது சமி, சஹால், பும்ரா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.