தொடரை கைப்பற்றுமா இந்தியா ? - இன்று 3வது ஒருநாள் போட்டி

 
ind vs eng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில், 12ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதல் இதனிடையே கடந்த 14ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

ind vs wi

இந்நிலையில்,  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என தொடரில் சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.