இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல் - நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு

 
IND Virat

டி20 உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற சுப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதே மைதானத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில், அந்த போட்டி நிறைவடைய தாமதமானதால், டாஸ் போட தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து டாஸ் போடப்பப்பட்ட நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

IND

இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலியுடன் கூட்டணி அமைத்த சூர்யகுமார் யாதவ் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 62 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர்.