தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து - அரையிறுதியில் இந்தியா

 
IND

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று போட்டியில் நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 159  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

NED

தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதேசமயம் அடுத்து நடக்கும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால் இன்று நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.