காமன்வெல்த் பதக்க பட்டியல் - இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ?

 
medal

காமன்வெல்த் விளையட்டு போட்டிகளில், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. 

common wealth

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் மட்டும் 4 பதங்கங்களை வென்றுள்ளது. அதாவது பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கமும், 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதேபோல் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி வெண்கல பதக்கமும் வென்றனர். இவ்வாறு 4 பதக்கங்களுடன் இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியாமுதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 13 பதக்கங்களுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும், இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.