காமன்வெல்த் பதக்க பட்டியல் - 7வது இடத்தில் இந்தியா

 
medal tally

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 20 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 6 வது நாள் முடிவில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றிருந்தது. 

இந்நிலையில் நேற்று 7வது நாள் போட்டி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.