காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் - 9 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா

 
medal

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.  

common wealth

3வது நாள் முடிவில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் மட்டும் 6 பதங்கங்களை வென்றிருந்தது. பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கமும், 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதேபோல் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி வெண்கல பதக்கமும், அச்சிந்தா ஷூலி தங்கமும் வென்றனர். இதேபோல் 63 கிலோ எடைப் பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார். 

இந்நிலையில் நேற்று 4வது நாள் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.  ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். பளுதூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார்.இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளதால் இது வரை இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.