காமன்வெல்த் - மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு 3 தங்கம்

 
Bajrang punia

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மல்யுத்த பிரிவில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கம் கிடைத்துள்ளது.  

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 

punia

நேற்று நடைபெற்ற மல்யுத்தத்தில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.  ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு வீரரான தீபக் புனியா ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இதே போல் பெண்களுக்கான மல்யுத்தத்தில் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் கனடாவின் கோடிநெஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.