காமன்வெல்த் பதக்க பட்டியல் - 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

 
medal

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.  7வது நாள் முடிவில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்தது. 

punia

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தினர். மொத்தமாக மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6 பதக்கங்கள் கிடைத்தது. அதாவது பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றனர். இதேபோல் அன்ஷூ மாலிக் வெள்ளி பதக்கமும், திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என்று மொத்தம் 134 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.