காமன்வெல்த் பேட்மிண்டன் - பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

 
Badminton

காமன்வெல்த் போட்டியில், பேட்மிண்டனில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  28ம் தேதி  முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன.

PV Sindhu

இந்நிலையில், பேட்மிண்டன் தொடக்க ஆட்டத்தில் கலப்பு அணி பிரிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமுதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி ஜோடி 21-9 21-12 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியின்'முஹம்மது இர்பான் சயீத் பட்டி , கஜாலா சித்திக் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்து இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் முராத் அலியை 21-7 21-12 என்ற கணக்கில் எளிதாக வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் மஹூர் ஷாசாத்தை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 21-7 21-6 என்ற கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். பின்னர் இந்திய இணை, ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஆகியோர் 21-12 21-9 என்ற கணக்கில் முராத் அலி, எம்.டி.ஐ.எஸ் பட்டி இணையை வீழ்த்தியது. இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-4, 21-5 என்ற செட் கணக்கில் மஹூர் ஷாஜாத் மற்றும் கஜாலா சித்திக் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது