நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

 
IndvsNZ

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே தடுமாறிய நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். முதல் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்‌. கிளன் பிலிப்ஸ் 36 ரன்களும்,பிரேஸ்வெல் 22 ரன்களும்,மிச்சல் சாண்ட்னர் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.34.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும்,ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

109 என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,சுப்மன் கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.20.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெடுகளை கைப்பற்றிய சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டியில் கொண்ட இந்த தொடரை இந்திய அணி இரண்டு வெற்றியுடன் தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.