3 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்தியா

 
ind vs wi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷிகர் தவான் நியமிகப்பட்டுள்ளார்.  இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று இரவு டிரிண்டாட் பகுதியில் உள்ள குயின்ஸ் பார்க்  ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங்க் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவானும், சுபன் கில்லும் களமிறங்கினர்.  சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.  3 ரன்னில் தனது 18-வது சதத்தை தவற விட்ட தவான் 97 ரன்களில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் வெளியேறினர். 40 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி கட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் கொஞ்சம் குறைந்தது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. 

WI

இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது.