காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 
ind women

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கடந்த 29ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் ஆஸ்திரேலியா மகளிர் அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் கடந்த போட்டியில் பார்படாஸ் அணியுடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் மகளிர் அணி இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.