ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி - இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறவுள்ள கடைசி சூப்பர் 12  போட்டியில் இந்தியா மற்றும்  ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. 

ZIM

இதையடுத்து குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதேசமயம்  பாகிஸ்தான் அணி வங்கதேத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால் இன்று நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி விவரம் : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.