நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி - இந்திய அணி பேட்டிங்

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறவுள்ள சுப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதே மைதானத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில், அந்த போட்டி நிறைவடைய தாமதமானதால், டாஸ் போட தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து டாஸ் போடப்பப்பட்ட நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

IND Virat

இந்திய அணி விவரம்: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

நெதர்லாந்து அணி விவரம்: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன்), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென் உள்ளிட்டோர் நெதர்லாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.