டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு - பிளேயிங் லெவன் இதுதான்!

 
IND

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி நடைபெற்றது.  இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.  இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. 

INDvsNZ

இந்திய அணி : ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து அணி : ஃபின் ஆலன், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.