இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

 
Ind vs SRI

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடிய போதும் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.   

IND

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இந்திய அணி : இஷான் கிஷன்(வ), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.