டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு - சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு

 
IND Toss

இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவதாக விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டியில், சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

IND

இந்திய அணி ; ரோஹித் சர்மா(கேட்ச்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இன்றைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை அணி :அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(வ), அஷேன் பண்டார, சரித் அசலங்க, தசுன் ஷனக(சி), வனிந்து ஹசரங்க, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, லஹிரு குமார உள்ளிட்டோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.