நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 
ind squad

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ள நிலையில், அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவதாக விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

இலங்கை தொடர் முடிந்ததும் அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத்  ,ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.