சுப்மன் கில் இரட்டை சதம் விளாசல் - நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்கு

 
Subman Gill

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல்  ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச  மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 

Subman Gill

தொடக்கத்தில் தடுமாறினாலும், சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 34ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 8 ரன்களும் , இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய கில் சதம் அடித்து அசத்தினார். மறுமனையில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இரட்டைசதம் அடித்து அசத்தினார்.  இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் குவித்தது.