சண்டே டபுள்ஸ் - ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

 
IPL

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் டெல்லி-லக்னோ அணிகளும், இரண்டாவது போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

dc

மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. 

CSK

இரவு 7.30 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஷோசியேசன் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகளில் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு வெற்றி பெற முடியும் என்பதால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் சென்னை அணி உள்ளது. 

dhoni

இதனிடையே நேற்று சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். போட்டியில் கவனம் செலுத்த முடியாததால் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாகவும், தோனியும் தனது முடிவை ஏற்றுக்கொண்டு, மீண்டும் கேப்டனாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்கவுள்ளது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.