அதிரும் ஆடுகளம்! ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள்

 
IPL

இன்றைய ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் லக்னோ-கொல்கத்தா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

RR

பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6ல் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதேபோல் பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இனிவரும் 4 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அணியால் ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இன்றை போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

lsg

இதேபோல் இரவு 7.30 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கும் செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kkr

இதேபோல் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.