அதிரும் ஆடுகளம் ! - ஐபில் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள்

 
IPL

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் குஜராத்-பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மும்பை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

rcb

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியி கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணியாகவும் குஜராத் அணி விளங்கி வருகிறது. இதேபோல் பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

MI

இதேபோல் இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக உள்ள மும்பை, இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வியே அடைந்துள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள மும்பை அணி மீதமுள்ள போட்டிகளிலாவது வெற்றி பெறும் என்ற ஏக்கத்தில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற மும்பை அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு செல்ல அந்த அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.