ஐபிஎல் இன்றைய போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதல்

 
Kkr

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 56வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

MI

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7ல் தோல்வியும், 4ல் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு ஃப்ளே ஆஃப் வாய்ப்பு மங்கியிருந்தாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தும், இனி வரும் ஆட்டங்களில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றாலும் சில வாய்ப்பு உள்ளது. மும்பை அணியை பொறுத்தவரையில் ஃப்ளே ஆஃப் கனவு முற்றிலுமாக முடிந்து போனது. மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள  10 போட்டிகளில் 8ல் தோல்வி அடைந்துள்ள நிலையில், 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃப்ளா ஆஃப் செல்ல முடியாவிட்டாலும், இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறுதலை தேடிக் கொள்ளும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.