ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ஐதராபாத்?- கொல்கத்தாவுடன் இன்று மோதல்

 
SRH

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

RCB  srh

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5ல் வெற்றியும் 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஆகையால் இன்றைய போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ள ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Kkr

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5ல் வெற்றியும் 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் அரிது. ஆகையால் இனி வரும் போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதாவது அதிசயம் நிகழ்ந்தால் கொல்கத்தா அணியும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.