குஜராத்தின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமா பஞ்சாப் ?

 
GT vs PBKS

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 48வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

GT

குஜராத் அணியை பொறுத்தவரையில், நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 8 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 16 புள்ளிகளை பெற்றுள்ள குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று விட்டால் ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதில் சென்றுவிடலாம். இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல குஜராத் அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

PBKS

பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.